விவசாயத்துறை அமைச்சகம்
தொழில்நுட்பம் சார்ந்த பயிர் கண்காணிப்பு அமைப்பு முறை
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2026 4:28PM by PIB Chennai
செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, தொலையுணர்வு, புவிசார் தகவல் அமைப்புகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் சார்ந்த பயிர் கண்காணிப்பு அமைப்பு முறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
வேளாண் எந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், சிறு, குறு விவசாயிகள் வேளாண் ட்ரோன்களை வாங்குவதற்கு 50% வரை நிதியுதவி வழங்குவதன் மூலம், ட்ரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. பிற விவசாயிகளுக்கு, வேளாண் ட்ரோன்களை வாங்குவதற்கு, அதற்கான கொள்முதல் செலவில் 40% நிதியுதவி வழங்கப்படுகிறது. வேளாண் ட்ரோன்களுக்கான தனிப்பயன் வாடகை மையங்களை அமைப்பதற்கும் செலவில் 40% நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 2,122 ட்ரோன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன அல்லது அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நமோ ட்ரோன் சகோதரி ன்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ட்ரோன்களை வழங்கி, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளுக்காக, விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்க அவர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உரங்கள் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 'ட்ரோன் சகோதரிகளுக்கு 1,094 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூர விமானி அமைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297646®=3&lang=1
(Release ID: 2297646)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297827)
வருகையாளர் எண்ணிக்கை : 46