எரிசக்தி அமைச்சகம்
மின்சார நிதிசார் நிலைத்தன்மை, குறைவான விலை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவதற்கான கட்டமைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 5:42PM by PIB Chennai
நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், மின்சாரத் துறையின் நிதிசார் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு 2003-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறைச் சட்ட விதிகளின் கீழ், ஒரு விரிவான கொள்கை, ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நிறுவியுள்ளது. இந்தக் கட்டமைப்பில், தேசிய மின்சாரக் கொள்கை, கட்டணக் கொள்கை, உரிய அரசு, மத்திய மின்சார ஆணையம், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் உருவாக்கப்பட்ட துணைச் சட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் மின்சாரக் கட்டணங்கள், 2003-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் உரிய மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த ஆணையங்கள், மத்திய அரசால் வகுக்கப்பட்ட தேசிய கட்டணக் கொள்கையின்படி செயல்படுகின்றன. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள், மின்சாரக் கொள்முதல், மின்பரிமாற்றம், மின் விநியோகம், மின் வழங்கல் செலவுகளைக் கருத்தில் கொண்டு சில்லறைக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. மாநில ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், வீட்டு உபயோக நுகர்வோர் உட்பட எந்தவொரு நுகர்வோர் பிரிவுக்கும் மாநில அரசுகள் மானியம் வழங்க வகை செய்கிறது.
மின்சார விலையைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விநியோக உரிமதாரர்கள் போட்டி விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விநியோக உரிமதாரர்கள், மின் பரிமாற்றங்களிலிருந்து போட்டி விலையில் மின்சாரத்தை வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டில் நெகிழ்வுத்தன்மைக்கான திட்டத்தின் கீழ், விநியோக உரிமதாரர்களுக்கு மின்சாரம் வழங்கும் ஆலைகள், உற்பத்திக்கு மலிவான நிலக்கரியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
மத்திய மின் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக், இன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297228®=3&lang=1
(Release ID: 2297228)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297434)
வருகையாளர் எண்ணிக்கை : 37