புவி அறிவியல் அமைச்சகம்
புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளராக டாக்டர் சீனிவாச குமார் தும்மலா பொறுப்பேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 5:51PM by PIB Chennai
புகழ்பெற்ற கடல்சார் ஆய்வாளரும், சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் ஸ்ரீனிவாச குமார் தும்மாலா, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். கூடுதல் பொறுப்பாக இத்துறையை நிர்வகித்து வந்த டாக்டர் என். கலைச்செல்வியிடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, டாக்டர் எம். ரவிச்சந்திரன் இப்பணியை முழுநேர அடிப்படையில் வகித்து வந்தார்.
இந்தியாவின் முக்கியத் திட்டமான 'ஆழ்கடல் ஆய்வு இயக்கத்தைத் தீவிரப்படுத்துதல், பருவநிலை மாதிரியாக்கத் திறன்களை மேம்படுத்துதல், மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், கடல்சார் பொருளாதாரம் சார்ந்த தேசிய இலக்குகளை முன்னெடுக்கவும் உதவும் வகையில் பலவிதமான பேரிடர் முன்னெச்சரிக்கை உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு மத்தியில், டாக்டர் தும்மலாவின் பொறுப்பேற்பு புவி அறிவியல் அமைச்சகத்திற்கு ஒரு முக்கிய மற்றும் உத்திசார்ந்த மாற்றமாக அமைகிறது.
கடல்சார் ஆய்வு, துருவப் பகுதி ஆராய்ச்சி, வானிலை சார்ந்த பேரிடர் தடுப்பு மற்றும் நிலையான கடல்வளப் பயன்பாடு ஆகிய துறைகளில் இந்தியா தனது அறிவியல் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் மிக முக்கியமான காலகட்டத்தில் இவரது தலைமைத்துவம் அமைந்துள்ளது.
அமைச்சகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, டாக்டர் தும்மலா முக்கிய தேசிய மற்றும் சர்வதேசத் தலைமைப் பொறுப்புகளை வகித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297234®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297385)
வருகையாளர் எண்ணிக்கை : 45