திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவீன காலத் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 5:28PM by PIB Chennai

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகள்,  நடப்பு ஆண்டில் (தமிழ்நாடு உட்பட) பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 என்பது தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இதில் மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை. இருப்பினும், 2022-23 நிதியாண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு நிதியாண்டிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ 2,392.37 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாடநெறிகள் தொழில்துறைத் தேவைகள், தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மாறிவரும் தேவைகள், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், செமிகண்டக்டர், ட்ரோன் தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி, 3டி பிரிண்டிங் போன்ற நவீன, எதிர்கால வேலைவாய்ப்பு சார்ந்த பணிகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, 600-க்கும் மேற்பட்ட நவீன, எதிர்காலத் திறன் சார்ந்த பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 30.06.2026 நிலவரப்படி, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ், 5.44 லட்சம் பேர் நவீன, எதிர்கால வேலைவாய்ப்பு சார்ந்த பணிகளில் பயிற்சி அல்லது அறிமுகப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

இந்தத் திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமாகும்; இது பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர் / ஷெட்யூல்டு பழங்குடியினர், பிற விளிம்புநிலை சமூகங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தில் சிறப்புத் திட்டங்கள் ஏற்பாடு மூலம், போதிய பிரதிநிதித்துவம் பெறாத சமூகப் பிரிவினரான ஷெட்யூல்டு வகுப்பினர் / ஷெட்யூல்டு பழங்குடியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், பழங்குடியின மாவட்டங்கள் போன்ற புவிசார் பகுதிகளைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், பழங்குடியின சமூகங்கள் மற்றும் பிற விளிம்புநிலை குழுக்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர்  திரு. ஜெயந்த் சவுத்ரி இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297206&reg=3&lang=1

(Release ID: 297206)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297379) வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी