திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்த மதிப்பீடு
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 5:26PM by PIB Chennai
திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், நாடு முழுவதும் (சத்தீஸ்கர் மாநிலம் உட்பட) உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது. அவை பல்வேறு திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வித் திட்டம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாகச் செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதும், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2019–20 முதல் 2026–27 வரையிலான காலத்தில் (30.06.2026 நிலவரப்படி), மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் முக்கிய திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் பயிற்சி பெற்றவர்களின் விவரங்கள் (மாநிலம்/யூனியன் பிரதேசம், ஆண்டு, திட்டம் வாரியாக) வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சகத்தின் திட்டங்களில், 2015-16 முதல் 2021-22 வரை செயல்படுத்தப்பட்ட பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் மூன்று பதிப்புகளில் மட்டுமே குறுகிய காலப் பயிற்சிப் பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு விவரங்கள் கண்காணிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ், சத்தீஸ்கரில் 28,142 பேர் வேலைவாய்ப்பு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0-ல், 'பணியிடப் பயிற்சி' உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகள் மூலம், பயிற்சி பெற்றவர்கள், பல்வேறு தொழில் வாய்ப்புக்களைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்திக்கொள்ள உதவுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297204®=3&lang=1
(Release ID: 2297204)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297378)
வருகையாளர் எண்ணிக்கை : 31