கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கான டிஜிட்டல் அணுகலை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 4:33PM by PIB Chennai

இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கான டிஜிட்டல் அணுகலை வலுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2026 மார்ச்-ல் தொடங்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்திய கலாச்சார அமைச்சக இணையதளத்தின் 2.0 பதிப்பு மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார வளங்களுக்கு தடையற்ற அணுகலை ஏற்படுத்த இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் நவீன, விரிவாக்கக்கூடிய பாதுகாப்பான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாஷினி தளத்துடன் ஒருங்கிணைத்ததன் வாயிலாக 22 இந்திய மொழிகளில் உள்ளடக்கம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அறிவுசார் தேடல், உள்ளடக்கக் கண்டறிதல், பன்மொழித் தொடர்பு ஆகியவற்றிற்கான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக் கூடிய பார்தி என்ற உரையாடல் செயலி செயல்படுத்தப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரம் சார்ந்த நிறுவனங்கள் இந்திய கலாச்சார இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தக்‌ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா, மராத்தா பேலஸ், தென் மண்டல கலாச்சார மையம் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297150&reg=3&lang=1

****

TV/IR/GS/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297345) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी