கலாசாரத்துறை அமைச்சகம்
98 நாடுகளுடன் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம் கையெழுத்தாகியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:36PM by PIB Chennai
இந்தியாவின் சர்வதேச கலாச்சார ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம் மூலம் இதர நாடுகளுடன் இந்தியாவின் கலாச்சார உறவுகளை கலாச்சார அமைச்சகம் மேம்படுத்துகிறது. இத்திட்டம் கட்டமைக்கப்பட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு மூலம் இந்தியாவின் நாகரீகப் பாரம்பரியம், கலாச்சாரக் பன்முகத்தன்மை, சமகால படைப்புப் பாரம்பரியங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கலாச்சாரப் பரிமாற்றங்கள், பாரம்பரிய பாதுகாப்பு, ஆவணப்படுத்துதல், திறன் மேம்பாடு, சர்வதேச கலாச்சார அமைப்புகளுடன் ஈடுபாடு ஆகியவற்றை ஆதரிக்கிறது.
சர்வதேச கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்தியத் திருவிழாக்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சாரக் குழுக்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை அமைச்சகம் மேற்கொள்கிறது. அத்துடன் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இதர இருதரப்புக் கலாச்சார ஒத்துழைப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அமல்படுத்துகிறது. அமைச்சகம் 98 நாடுகளுடன் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இது கலாச்சாரம், அருங்காட்சியகங்கள், பாரம்பரியம், நிகழ்த்துக் கலைகள் மற்றும் தொடர்புடைய பிற துறைகளின் ஒத்துழைப்புக்கான நிறுவன கட்டமைப்பை அளிக்கிறது.
இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297151®=3&lang=1
****
TV/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297332)
வருகையாளர் எண்ணிக்கை : 39