பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 4:28PM by PIB Chennai

பெண்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கு மத்திய அரசு உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்ற தொலைநோக்குடன் பல்வேறு பன்முகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக 'மிஷன் சக்தி' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், வன்முறை மற்றும் துயரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த மற்றும் உடனடி உதவிகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் 991 'ஒன் ஸ்டாப் சென்டர்கள்' அமைக்கப்பட்டு, அதன் வழியாக 15.20 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு மருத்துவ, சட்ட மற்றும் தற்காலிக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 181 என்ற கட்டணமில்லா மகளிர் உதவி எண் மூலம் 1.04 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்துள்ளனர். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்காக 'சமர்த்தியா' பிரிவும் செயலாற்றி வருகிறது.

இவற்றுடன், சிறார் பாதுகாப்பிற்காக 'மிஷன் வத்சல்யா' திட்டமும், அவசர உதவிகளுக்காக '112' மற்றும் குழந்தைகள் உதவி எண்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இணைய குற்றங்களைத் தடுத்திட தேசிய தரவுத்தளங்கள் மற்றும் மாவட்டந்தோறும் மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று மக்களவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296048&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296919) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी