சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்வி உதவித் தொகைத் திட்டத்தால் ராய்ப்பூர் என்ஐடி-யில் பி.டெக் படிக்கும் மாணவி

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2026 2:07PM by PIB Chennai

உயர்கல்வி இளம் மாணவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் நிதி நெருக்கடிகளும் வழிகாட்டுதல் இல்லாத நிலையும் தடைகளை உருவாக்குகின்றன. 19 வயதான அனு சுப்ரியாவைப் பொறுத்தவரை, ராய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) பி.டெக் படிப்பது அவருக்கு ஒரு அரிதான கனவாக இருந்தது. இருப்பினும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்ததால், உயர்கல்வியுடன் தொடர்புடைய செலவுகளைச் சமாளிப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது.

ஓபிசி பிரிவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பி.டெக் மாணவியான அனு சுப்ரியா, தனது உயர்கல்விப் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டார். தினக்கூலித் தொழிலாளியான அவரது தாய், அவரைத் தனி ஒருவராக வளர்த்ததால், உயர்கல்விச் செலவுகளைச் சமாளிப்பது குடும்பத்திற்கு மிகவும் கடினமாக இருந்தது.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், அனு தனது கல்வி லட்சியங்களைத் தொடர்வதில் உறுதியாக இருந்தார். அவரது விடாமுயற்சி, என்ஐடி ராய்ப்பூரில் அவருக்கு சேர்க்கை கிடைக்க வழிவகுத்தது. அங்கு அவர் தனது பி.டெக் பயணத்தைத் தொடங்கி, தொழில்நுட்பக் கல்வித் துறையில் அடி எடுத்து வைத்தார்.

2025-ம் ஆண்டில், அனு உயர்தரக் கல்வித் திட்டத்தின் கீழ் ₹ 1,29,100 நிதியுதவி பெற்றார். இந்த உதவித்தொகை அவரது குடும்பத்தின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைத்து, ஒரு முதன்மை கல்வி நிறுவனத்தில் தனது கல்வியைத் தொடர அவருக்கு உதவியது. மேலும், இந்த ஆதரவு, தனது படிப்பில் கவனம் செலுத்துவதற்கும், தனது தொழில்முறை லட்சியங்களை நோக்கிச் செயல்படுவதற்கும் அவருக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது.

கல்வி உதவித்தொகையின் தாக்கம் குறித்துப் பேசிய அனு சுப்ரியா,

“எனது கல்விப் பயணத்தில் உயர்தரக் கல்வித் திட்டம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த உதவித்தொகை ஆதரவு, என் குடும்பத்தின் மீதான நிதிச் சுமையைக் குறைத்து, ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தில் எனது கல்வியைத் தொடர எனக்கு உதவியுள்ளது. எனது இலக்குகளை அடைவதற்கும், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் கடினமாக உழைக்க இது என்னை ஊக்குவித்துள்ளது." என்றார்.

கல்விக்கு அப்பாற்பட்டு, அனு தனது தொழில்நுட்ப, தனிப்பட்ட திறன்களைத் தீவிரமாக வளர்த்து வருகிறார்.  உடற்பயிற்சி, ஓவியம் வரைதல் போன்ற பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளிலும் அவர் பங்கேற்கிறார். இவை அவரது ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றன.

எதிர்காலத்தில், அனு தொழில்நுட்பத் துறையில் ஒரு வெற்றிகரமான, வாழ்க்கையை அமைத்து, தனது அறிவு, திறன்களின் மூலம் சமூகத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்க இலக்கு கொண்டுள்ளார். மேலும், அவர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, கணினி அறிவியல் துறையில் உயர் சாதனைகளைப் படைக்கவும் விரும்புகிறார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு, கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் எவ்வாறு உதவும் என்பதை அனு சுப்ரியாவின் பயணம் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296480&reg=3&lang=1

***

(Release ID: 2296480)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296566) வருகையாளர் எண்ணிக்கை : 66