ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம்: நிதி ஆயோக் மதிப்பீடு!
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 4:00PM by PIB Chennai
மத்திய அரசின் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம்' குறித்து நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 11 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி மாநிலங்களவையில் சமர்ப்பித்தார்.
இத்திட்டம் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் சுமார் 92 லட்சம் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனடைந்த குடும்பங்களின் சராசரி வருமானம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களின் தன்னம்பிக்கை 58 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, 46 சதவீதம் பெண்கள் தனித்தே வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் திறன் பெற்றுள்ளனர்.
சுயஉதவிக் குழுக்களின் கடன் திரும்பச் செலுத்தும் திறன் சிறப்பாக உள்ளதால், அவர்களின் வராக் கடன் விகிதம் 1.85 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்காக 55,371 'வங்கி சகோதரிகள்' களத்தில் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இக்குடும்பங்களின் வருமானத்தை முறையாகக் கண்காணிக்க 'லட்சாதிபதி சகோதரி இணையதளம்' உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296020®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296127)
வருகையாளர் எண்ணிக்கை : 39