இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 7:13PM by PIB Chennai
நாட்டில் உள்ள நிலக்கரியை அடிப்படையாக கொண்ட பழமையான அனல் மின் நிலையங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், அவற்றை நவீனமயமாக்கவும் மத்திய அரசு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது.
இதற்காக தேசிய அனல் மின் கழகம் , மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ) பி.ஹெச்.இ.எல் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, '2023 நவீனமயமாக்கல் வழிகாட்டுதல்களை' உருவாக்கியது. இதன் அடிப்படையில், 2022 டிசம்பர் 2022 நிலவரப்படி 20 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 223 மின் அலகுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மின் விநியோகப் பாதிப்பைத் தவிர்க்க, இப்பணிகள் 2024 ஜனவரி முதல் 2046 ஜூன் வரை 9 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இதில் மத்திய அரசின் 81 அலகுகள், மாநில அரசின் 116 அலகுகள் மற்றும் தனியார் துறையின் 26 அலகுகள் அடங்கும்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு தனி நிதி அல்லது திட்டங்களை வழங்காது; சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி நிறுவனங்களே வணிக ரீதியாக நிதி திரட்டி இதைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295695®=48&lang=2
***
TV/VK/RJ