சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான திட்ட முதலீட்டு நிதியத்தின் உதவியுடன், பேக்கேஜிங் உற்பத்தியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2026 5:31PM by PIB Chennai

சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விநியோக நடைமுறைகளுக்கு ஆதரவளித்தல், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் தொழில்துறைச் சூழலமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு, உரிய நேரத்தில் நிதி உதவி கிடைப்பது பெரும்பாலும் ஒரு சவாலாகவே உள்ளது.

நிறுவன நிதி ஆதரவின் மாற்றியமைக்கும் தன்மையை நிரூபிக்கும் வகையில், திரு. கௌதம் மக்வானாவால் முன்னெடுக்கப்பட்ட ரெயின்போ பேக்கேஜிங் என்ற தனியார் நிறுவனம், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான திட்ட மூலதன நிதியத்தின் உதவியுடன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்கேஜில், தனது பிளாஸ்டிக் பேக்கேஜிங் உற்பத்திப் பிரிவை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டம், நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தயாரிப்புத் தரத்தை உயர்த்தவும், நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியுள்ளது.

அரசு - தனியார் துறை வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனத்தின் அதிகரித்து வரும் தேவையை அங்கீகரித்து, இந்த மூலதன நிதியம் 2015 - ம் ஆண்டில், திட்ட மூலதனம் (பங்கு, விருப்ப மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்) மூலம் ரூ 4.46 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்த நிதியுதவி திறமையான நிபுணர்களைப் பணியமர்த்தவும், செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தவும், பெரிய கொள்முதல் ஆணைகளை திறம்பட நிறைவேற்றுவதற்காக அதன் உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்தவும் அந்த நிறுவனத்திற்கு உதவியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295599&reg=3&lang=1

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2295891) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी