கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறையில் தானியக் கிடங்கு உட்கட்டமைப்பு

प्रविष्टि तिथि: 04 AUG 2026 5:02PM by PIB Chennai

பிரதமரின் தானிய வள வேளாண்மைத் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மூலம் தானியக் கிடங்குகள், பதப்படுத்தும் மையங்கள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர், உன்னாவ் உள்ளிட்ட பல மாவட்டங்கள் இத்திட்டத்தில் பயனடைகின்றன. இக்கிடங்குகளைச் சிறப்பாகப் பராமரிக்க 'நபார்டுமற்றும் சேமிப்புக் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் ஊழியர்களுக்கு நவீன கிடங்கு மேலாண்மைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் விரிவான அறிக்கையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி  ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கிறது. முன்பண மானியத்தை நபார்டு இணையதளம் மூலம் சரிபார்க்கிறது. திட்டம் முடிவடைந்ததும் வங்கி மற்றும் நபார்டு அதிகாரிகளால் நேரில் கள ஆய்வு செய்யப்படுவதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294350&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2295887) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी