தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு-காஷ்மீரில் செல்பேசி இணைப்பின் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 04 AUG 2026 5:21PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் சேவைப் பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீநகர், குல்மார்க், அனந்த்நாக் மற்றும் பஹல்காம் ஆகிய நகரங்கள் மற்றும் ஸ்ரீநகர்-பஹல்காம், ஸ்ரீநகர்-குல்மார்க் ஆகிய நெடுஞ்சாலைப் பாதைகளில் செல்பேசி இணைப்பின் தரம் குறித்த இயக்கச் சோதனை முடிவுகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் செல்பேசி வலையமைப்பு சேவைகளின் நேரடித் தரத்தை மதிப்பிடுவதும் சரிபார்ப்பதுமே இந்தச் சோதனையின் நோக்கமாகும். இந்தச் சோதனையின்போது, கவரேஜ், அழைப்பு துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பின் வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றவேகம் போன்ற முக்கிய சேவை தர அளவீடுகள்  அடிப்படையில் சேவை வழங்குநர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

2026 ஜூன் 8 முதல் 12 வரையிலான காலகட்டத்தில், டிராய்-ஆல் நியமிக்கப்பட்ட முகமை மூலம் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நகரப் பகுதிப் பயணம் (373.6 கி.மீ), நெடுஞ்சாலைப் பயணம் (111.5 கி.மீ), ஹாட்ஸ்பாட் இடங்கள் (06), நடைபயணச் சோதனை (4.9 கி.மீ) மற்றும் ஒரு இடத்தில் வெவ்வேறு சேவை வழங்குநர்களுக்கு இடையிலான அழைப்புச் சோதனை ஆகியவை அடங்கும். இந்தச் சோதனைகள் டிராய்-இன் டெல்லி மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையின் முடிவுகள், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த இயக்கச்  சோதனை குறித்த விரிவான அறிக்கையை www.trai.gov.in என்ற டிராய்-ன் இணையதளத்தில் அணுகலாம்‌.

நியமிக்கப்பட்ட முகமை மூலம், 2026 ஜூன் 30 அன்று அகமதாபாத் முதல் காந்திதாம் வரையிலான ரயில் பாதையில் 300 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய சோதனையை டிராய் நடத்தியது. ஆணையத்தின் ஜெய்ப்பூர் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவுகள், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த இயக்கச்  சோதனை குறித்த விரிவான அறிக்கையை www.trai.gov.in  என்ற இணையதளத்தில் அணுகலாம்‌.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294377&reg=3&lang=1   

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2295800) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी