மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் போலி வீடியோக்களைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2026 4:26PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் 'டீப் ஃபேக்' எனப்படும் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க மத்திய அரசு சட்டக் கட்டமைப்புகளை தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் கடந்த 2026 பிப்ரவரி 10 அன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களுக்குத் தெளிவான லேபிள்கள் மற்றும் கண்காணிப்புத் தரவுகளைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றம் அல்லது அரசின் உத்தரவு கிடைத்தவுடன் சட்டவிரோத தகவல்களைத் தளங்களில் இருந்து அகற்றுவதற்கான காலக்கெடு 36 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைத் தீர்ப்பதற்கான கால வரம்பும் 72 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா மக்களவையில் சமர்ப்பித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295500&reg=3&lang=1   

***

TV/EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2295773) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी