மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் மற்றும் செமிகண்டக்டர் உள்கட்டமைப்பு விரிவாக்கம்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 4:05PM by PIB Chennai
உறுதி செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப வலுவான செயற்கை நுண்ணறிவு சூழலை உருவாக்க ரூ.10,371.92 கோடி மதிப்பீட்டில் 'இந்தியா ஏஐ மிஷன்' செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 20 உள்நாட்டு அடிப்படை மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, 93.18 லட்சம் ஜிபியு நேரங்கள் மானிய விலையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி சாஸ்திரி பூங்காவில் உள்ள என்ஐசி தரவு மையத்தில் 1.1 EFLOPS திறன் கொண்ட அதிவேக செயற்கை நுண்ணறிவு கணினி அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 'செமிகான் இந்தியா' திட்டத்தின் கீழ் ரூ.1.64 லட்சம் கோடி முதலீட்டில் 12 உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 3 திட்டங்கள் வர்த்தக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்திய வடிவிலான சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை விரிவுபடுத்த ரூ.1,27,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'செமிகான் 2.0' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகவலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா மக்களவையில் தெரிவித்தார் .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295477®=3&lang=1
***
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2295720)
आगंतुक पटल : 4