பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுவாமித்வா திட்ட சாதனைகள்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 4:21PM by PIB Chennai

கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவர்களின் சொத்துகளுக்கு ‘உரிமைப் பதிவேடு’  வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ‘சுவாமித்வா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 3.30 லட்சம் கிராமங்களில் ட்ரோன் ஆய்வு நிறைவடைந்துள்ளது. 1.97 லட்சம் கிராமங்களுக்கு 3.24 கோடி சொத்து அட்டைகள் தயார் செய்யப்பட்டு, அதில் 2.72 கோடி அட்டைகள் உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

ட்ரோன் மற்றும் சிஓஆர்எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகத் துல்லியமான வரைபடங்கள் தயாரிக்கப்படுவதால், சொத்து தகராறுகள் குறைகின்றன. இந்தச் சொத்து அட்டைகளைப் பிணையமாக வைத்து வங்கிக் கடன்களைப் பெற பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை மற்றும் மாநில வருவாய்த் துறைகள் இணைந்து செயல்படுகின்றன. இதுவரை இத்திட்டத்தின் கீழ் ரூ.1,713 கோடி மதிப்பில் 11,147 கடன்கள் வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

 

இத்திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட 3.38 லட்சம் கிராமங்களில் குறித்த காலத்தில் முடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (என்ற) லலன் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294294&reg=3&lang=1  

***

TV/VK/SE

 


(रिलीज़ आईडी: 2295700) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी