கலாசாரத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பகுதிகளின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:51PM by PIB Chennai
நாட்டில் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் 3,688 நினைவுச் சின்னங்கள் மற்றும் பகுதிகள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் அதிகார வரம்பிற்குள் உள்ளது. இந்த நினைவுச் சின்னங்கள், பகுதிகளைப் பாதுகாக்கும் பணிகளை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை மேற்கொள்கிறது. உலக பாரம்பரிய தினம், உலக பாரம்பரிய வாரம், அருங்காட்சியக தினம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது கலாச்சார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை தொல்லியல் ஆய்வுத் துறை அளிக்கிறது. அத்துடன் கலாச்சார பாரம்பரியம் குறித்த அறிவை மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் அளிக்கும் வகையில் கருத்தரங்குகளையும், பயிலரங்குகளையும் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம் நடத்துகிறது.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக 2025-26-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னைக்கு ரூ 10.70 கோடி ஒதுக்கப்பட்டதில் முழுவதுமாக அத்தொகைச் செலவிடப்பட்டது. திருச்சிக்கு ரூ 5.90 கோடி ஒதுக்கப்பட்டத்தில் முழுவதுமாக அத்தொகைச் செலவிடப்பட்டது. நாடு முழுவதும் ரூ. 376.88 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 376.67 கோடி செலவிடப்பட்டது.
இத்தகவலை மத்தியக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295430®=3&lang=1
***
TV/IR/SM/SE
(रिलीज़ आईडी: 2295699)
आगंतुक पटल : 7