மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பை மேம்படுத்தத் தரவு மையங்களின் திறன் விரிவாக்கம்: மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தகவல்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 4:14PM by PIB Chennai

இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் வகையில், தரவு மையங்களின் திறன் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று (05.08.2026) இதனைத் தெரிவித்த அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பயன்பாட்டை அரசு பரவலாக்கி வருவதாகவும், இந்தியாவில் தரவு மையங்கள் சீரான வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கூறினார். தரவு மையங்களின் நிறுவப்பட்ட திறன் 2020-ம் ஆண்டில் 375 மெகாவாட்டில் இருந்து, தற்போது சுமார் 1,575 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களைத் தாண்டி ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கும் இத்துறை தற்போது விரிவடைந்து வருவதாக அவர் தெரிவித்தார். தரவு மையங்களை நிறுவுவதற்கு மத்திய அரசு எந்தவொரு மானியமும் வழங்குவதில்லை எனக் குறிப்பிட்டார். இத்துறையில் நீர்ப் பயன்பாட்டைக் குறைக்கவும் செயல்திறனை உயர்த்தவும் நவீனக் குளிர்விக்கும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295483&reg=3&lang=1   

***

TV/PD/SE


(रिलीज़ आईडी: 2295697) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी