கலாசாரத்துறை அமைச்சகம்
நூலகங்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:50PM by PIB Chennai
இந்திய அரசியமைப்பின் 7-வது அட்டவணையின் படி நூலகம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பொது நூலகங்கள் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அதிகாரிகளின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. எனினும், மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் கீழுள்ள தன்னாட்சி அமைப்பான ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை நாட்டிலுள்ள பொதுநூலகங்களின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நூலகக் கட்டிடங்களின் கட்டுமானம், புதுப்பித்தல், புத்தகங்களைக் கொள்முதல் செய்தல், உபகரணங்களை வாங்குதல், நூலக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான நிதி உதவி அளிக்கிறது. பதிப்புரிமையற்றக் கையெழுத்துப் பிரதிகள், அரிய ஆவணங்கள், இதர பாரம்பரியப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் நூலகச் சேவைகளின் தரத்தை மேம்படுத்த மாநில நூலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதை ஊக்குவிக்கிறது.
இந்திய தேசிய ஆவணக் காப்பகம் சுமார் 19.7 கோடி பக்கங்களை மின்னணு வடிவில் மாற்றியுள்ளது.
இத்தகவலை மத்தியக் கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திரசிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295429®=3&lang=1
***
TV/IR/SM/SH/SE
(रिलीज़ आईडी: 2295673)
आगंतुक पटल : 5