கலாசாரத்துறை அமைச்சகம்
பொதுமக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு கலாச்சார அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:49PM by PIB Chennai
கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் குழுமம் அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கானத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதன்மையான முகமையாகச் செயல்படுகிறது. இத்திட்டம் மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு முக்கிய முன்முயற்சி ஆகும். இது பொதுமக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையையும் விழிப்புணர்வையையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிவியல் கலாச்சார மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2025-26-ம் ஆண்டில் ரூ 11,767.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 11,757 லட்சம் விடுவிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில் மண்டல அறிவியல் மையம் 2013 மே 6 அன்று அமைக்கப்பட்டது. அறிவியல் கலாச்சார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதுமைக் கண்டுபிடிப்பு மையங்கள் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமும், திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையமும், கோயம்புத்தூரில் மண்டல அறிவியல் மையமும், திருச்சியில் அண்ணா அறிவியல் மையமும் ஏற்படுத்தப்பட்டது.
இத்தகவலை மத்தியக் கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295428®=3&lang=1
***
TV/IR/SM/SE
(रिलीज़ आईडी: 2295669)
आगंतुक पटल : 8