அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 06 AUG 2026 2:55PM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிமேம்பாட்டுப் பணிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் 2025-26 அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு ஆராய்ச்சி, மேம்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ள தொகை குறித்த ஆண்டுவாரியான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளுக்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு, 5,03,751 கோடி தொகையை செலவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஒட்டுமொத்தமாக) 2.13 சதவீதமாகும்.

மத்திய அரசு அமைச்சகங்கள், துறை சார்ந்த நிறுவனங்கள், மாநில அரசுகளின் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள்/மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை/கூட்டுத்துறை நிறுவனங்கள், பொது உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி, மேம்பாட்டுச் செலவினங்களும் இதில் அடங்கும்.

மத்திய அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல், தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறைஅறிவியல், தொழிலக ஆராய்ச்சித் துறை & அறிவியல்,தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் கீழ் செயல்படும் 71 ஆராய்ச்சி நிறுவனங்களின் கட்டமைப்புகள் மூலம், நாடு முழுவதும் ஆராய்ச்சி,மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

மாநிலங்களவையில் இன்று,மத்திய அறிவியல், தொழில்நுட்பத்  துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295434&reg=3&lang=1

(Release ID: 2295434)

 

***

 

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2295650) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी