விண்வெளித்துறை
விண்வெளித் துறையில், வர்த்தக ரீதியிலான செயற்கைகோள்களை செலுத்துவதில் இந்திய செலுத்து வாகனங்களின் (ராக்கெட்) மீதான உலக நாடுகளின் நம்பிக்கை
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:48PM by PIB Chennai
எல்விஎம்3-எம்6 ராக்கெட், அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை 520 கி.மீ தொலைவில் உள்ள தாழ் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்தியாவிலிருந்து இந்த இலகுரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அதிக எடை கொண்ட (6100 கிலோ) செயற்கைகோள் இதுவாகும். இந்த நிகழ்வு இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது எல்விஎம்3 ஏவுவாகனத்தின் மீதான வர்த்தக ரீதியான நம்பிக்கையை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளதுடன், சர்வதேச அளவில் வர்த்தக ரீதியிலான செயற்கைகோள் செலுத்துவதற்கான சந்தையில் உலக நாடுகள் விரும்பும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்திய விண்வெளித் திட்டத்திற்கு உத்திசார், தொழில்நுட்ப ரீதியான நன்மைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை முன்னெடுத்து வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதல், விண்வெளி நிலையம் அமைத்தல், விண்வெளி ஆய்வுப் பயணங்கள் உள்ளிட்ட விண்வெளித் துறை சார்ந்த இலக்குகளை அடைவதே இத்தகைய முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.
மாநிலங்களவையில் இன்று, மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295426®=3&lang=1
----
VJ/SV/SH
(रिलीज़ आईडी: 2295534)
आगंतुक पटल : 8