எஃகுத்துறை அமைச்சகம்
2026 ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் நாட்டின் எஃகுத் துறை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:31PM by PIB Chennai
நாட்டின் எஃகுத் துறை 2026 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் நாட்டின் கச்சா எஃகு உற்பத்தி 56.3 மில்லியன் டன்னாகவும், முடிவுற்ற எஃகு உற்பத்தி 54.3 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துள்ளது. எஃகுப் பொருட்களின் நுகர்வு 55.9 மில்லியன் டன்னாகப் பதிவாகி, நுகர்விலும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான 'செயில்' நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,636 கோடி நிகர லாபம் ஈட்டி, 138 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான சிறப்பு எஃகு வகைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (டிஆர்டிஓ) 'செயில்' பெற்றுள்ளது. மேலும் ரவுர்கேலா எஃகு ஆலையில் எஃகு கழிவுகளை மதிப்புக்கூட்டப்பட்ட நுண் துகள்களாக மாற்றும் புதிய ஆலையைத் தொடங்கி பசுமை எஃகு முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளது. 'என்எம்டிசி' நிறுவனம் ஜூலை மாதத்தில் 4.06 மில்லியன் டன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதுடன், தாமிரம் உள்ளிட்ட வியூகத் தாதுக்களில் முதலீடுகள் குறித்து அர்ஜென்டினாவின் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295350®=3&lang=1
***
VJ/PD/SH
(रिलीज़ आईडी: 2295488)
आगंतुक पटल : 7