பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் கல்விசார் முடிவுகள்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 12:40PM by PIB Chennai

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் அனுமதி, செயல்பாட்டு நிலை, கட்டுமானத்தின் பல்வேறு நிலைகள் குறித்த மாநில வாரியான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள இந்தப் பள்ளிகளில், ஏற்கனவே 9,111 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், மற்றொரு தொகுதியாக 7,267 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

2025-26-ம் கல்வியாண்டில், இந்தப் பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் 10-ம் வகுப்பில் 93.62 சதவீதமாகவும், 12-ம் வகுப்பில் 87.82 சதவீதமாகவும் இருந்தது. 10-ம் வகுப்பில் 173 பள்ளிகளும், 12-ம் வகுப்பில் 92 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன. அதே ஆண்டில், இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐஐடி-ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் திறமையான மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், வழிகாட்டுதல், உயர்தரப் பயிற்சியை வழங்க எட்டு சீர்மிகு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு விரைவான கற்றல் அடிப்படையிலான இணைப்படிப்புத் திட்டம், இது போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையவழி கல்விசார் பயிற்சியையும் இப்பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295356&reg=3&lang=1

***

 

VJ/SV/SH


(रिलीज़ आईडी: 2295459) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी