பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவில் ஷெட்யூல்டு பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 12:42PM by PIB Chennai

நாட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் வகையில்,தர்தி ஆபா பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டம் 2024 அக்டோபர் 2 அன்று, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டதாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்கா தாஸ் உய்கே தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள அவர், 17 தொடர்புடைய அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 25 வகையான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம், கர்நாடகா மாநிலம்  ஹாசன் மாவட்டம் உட்பட நாடு முழுவதிலும் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள், 2,911 வட்டங்களில் வசிக்கும் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதன் மூலம் 63,843 கிராமங்களில், உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை முழுமையாக நிரப்புதல், சுகாதாரம், கல்வி, அங்கன்வாடி வசதிகளை மேம்படுத்துதல், வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் திரு துர்கா தாஸ் உய்கே கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295358&reg=3&lang=1

***

VJ/SV/SH


(रिलीज़ आईडी: 2295445) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी