பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையவழி குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் தடுக்க ஒருங்கிணைந்த கட்டமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2026 4:13PM by PIB Chennai

குழந்தைகள் மீதான இணைய வழி பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சுரண்டல்களைத் தடுக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இணைந்து ஒருங்கிணைந்த வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

 

போக்சோ மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் இணைய வழியில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது, ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குவது மற்றும் பகிர்வது கடுங்குற்றமாக்கப்பட்டுச் சிறைத்தண்டனையுடன் கூடிய கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

 

மேலும், 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, போலி படங்கள்  உள்ளிட்ட பாலியல் சார்ந்த உள்ளடக்கங்கள் குறித்த புகார்கள் பெறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்திற்குள் அவற்றைச் சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற இடைநிலை நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன. 'சஹயோக்' வலைத்தளம் , 'தேசிய சைபர் குற்றப் புகார் பதிவு தளம்' மற்றும் சைபர் குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம்  வாயிலாகப் புகார்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், தகவல் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டம் மூலம் 11.37 லட்சத்திற்கும் அதிகமானோருக்குச் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294855&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2294855

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295265) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी