பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
திரிபுராவில் பழங்குடியின உற்பத்தியாளர்களின் வருவாயைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:52PM by PIB Chennai
திரிபுரா உட்பட நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் 'பிரதமரின் பழங்குடியினர் விகாஸ் மிஷன்' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், டிரைஃபெட் அமைப்பு சார்பில் சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திரிபுராவில் 2,957 குடும்பங்களைச் சேர்ந்த 470 பழங்குடியினக் கைவினைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மேலும், திரிபுராவில் 18,666 பயனாளிகளை இணைத்து 87 வன்தன் விகாஸ் மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 80 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களுடன் இணைக்கப்பட்ட சுயஉதவிக் குழுக்கள் உள்ளூர் சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் ரூ. 113.85 லட்சம் மதிப்பிலான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்துள்ளன.
அத்துடன், சிறு வனப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் திரிபுரா உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் 87 வகை சிறு வனப் பொருட்களுக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்தகவலை மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294709®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2295158)
आगंतुक पटल : 5