பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பினருக்கான (எஸ்டி) நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை அவர்களது உயர்கல்விக்குப் பயன்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:51PM by PIB Chennai
ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பினருக்கான (எஸ்டி) கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ், நிலுவையில் உள்ள தொகைகள், அந்த வகுப்பைச் சார்ந்த மக்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மாநிலங்களவையில், அத்துறைக்கான இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே இன்று தெரிவித்தார்.
பழங்குடியின மாணவர்களுக்கான மெட்ரிக் கல்விக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை (11-ம் வகுப்பு, அதற்கு மேல்),
பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கான தேசிய கல்வி உதவித்தொகை (சிறந்த மாணவர்களுக்கு)
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய ஆய்வு உதவித்தொகை,
பழங்குடியின மாணவர்களுக்கான வெளிநாட்டுப் படிப்பிற்கான தேசிய கல்வி உதவித்தொகை ஆகியவை இதில் அடங்கும்.
இந்த கல்வி உதவித்தொகைத் திட்டம், அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மெட்ரிக் வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் உச்சவரம்பு இல்லாத கல்வி உதவித்தொகைத் திட்டமாகும். இதில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள, 11-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பயிலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது (தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் எவ்வித உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை). விண்ணப்பங்களைப் பெறுதல், சரிபார்த்தல், பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தல், கல்வி உதவித்தொகைத் தொகையை வழங்குதல் ஆகியவை அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முதன்மைப் பொறுப்பாகும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகள், தேவையான ஆவணங்கள், விதிமுறை சார்ந்த இணக்க நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் இந்த உதவித் தொகையின் மத்திய அரசின் பங்கை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294705®=3&lang=1
(Release ID: 2294705)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295086)
आगंतुक पटल : 8