பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் இருளர் பழங்குடியினர் சமூகத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசு உதவுகிறது
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:52PM by PIB Chennai
பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருளர் பழங்குடியினர் சமூகம் உட்பட குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடியினர் சமூகத்தினருக்கான நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை அரசு மேம்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், இந்தியப் பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு தமிழ்நாட்டில் திருப்பத்தூர், செங்கல்பட்டு, நாமக்கல், அரியலூர், நீலகிரி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் 37 வன செல்வ மேம்பாட்டு மையங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 34 மையங்களில் இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 2,135 பயனாளிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த மையங்கள் இருளர் சமூகத்தினர் சேகரிக்கும் காட்டுத் தேன், நறுமணப் பொருட்கள், முந்திரி, மூலிகைகள், புளி உட்பட உள்ளூர் வன பொருட்களுக்கான மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தை ஆதரவை அளிக்கின்றன. இப்பொருட்கள், உள்ளூர் சந்தைகள், கண்காட்சிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இருளர் சமூகத்தினர் மூலம் ரூ.75.89 லட்சம் மதிப்பிலான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294708®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2295074)
आगंतुक पटल : 6