சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை திருமுடிவாக்கத்தில் எம்எஸ்எம்இ-க்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிஐஎஸ் நடத்தியது

प्रविष्टि तिथि: 17 JUL 2026 7:18PM by PIB Chennai

 

நாட்டின் தேசிய தரநிலை அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கிடையே (எம்எஸ்எம்இ) இந்திய தர நிலைகள், தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை அலுவலகம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து டெக்ஸ்போ 2026 பி2பி கண்காட்சியின் ஒரு பகுதியாக 2026 ஜூலை 16 அன்று திருமுடிவாக்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிஐஎஸ் விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.  இதில், வாகன உற்பத்தித் தொழில், மின்னியல் மற்றும் மின்னணுவியல், ஜவுளி, தோல், மருத்துவ உபகரணங்கள், உபகரண உற்பத்தி, உலோக தயாரிப்பு, இயந்திர உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 130 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பிஐஎஸ் உரிமம் பெறுவதன் நன்மைகள், தரக்கட்டுப்பாட்டு ஆணைகள், பிஐஎஸ் மேலாண்மை முறைமை சான்று, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிஐஎஸ் வழங்கும் சலுகைகள், தளர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிஐஎஸ் சென்னை கிளை அலுவலக துணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு பக்கி பாலு, தரநிலைப்படுத்துதல், தர உறுதிப்பாடு ஆகியவற்றில் பிஐஎஸ்-ன் பங்களிப்பு குறித்து விளக்கினார்.  பிஐஎஸ் சான்றளிப்பு திட்டங்களின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை குறித்து அவர் எடுத்துரைத்தார்.  அதன்படி, வருடாந்திர குறைந்தபட்ச மார்க்கிங் கட்டணத்தில் குறு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு 80%, சிறு நிறுவனங்களுக்கு 50%, நடுத்தர நிறுவனங்களுக்கு 20%, மகளிர் தொழில் முனைவோர் நடத்தும் நிறுவனங்களுக்கு கூடுதலாக 10% சலுகையும் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.   

***

VJ/PD/IR/SU/KR


(रिलीज़ आईडी: 2294843) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English