ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புறப் பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
04 AUG 2026 4:20PM by PIB Chennai
கிராமப்புறக் குடும்பங்களைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, காலப்போக்கில் அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு ஏற்படும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் (தில்லி மற்றும் சண்டிகர் தவிர்த்து) 'தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தை' (DAY – NRLM) செயல்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 10.08 கோடி பெண்கள் 92 லட்சம் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10,04,61,081 சுயஉதவிக் குழுக்களின் பெண் உறுப்பினர்கள்
பயனடைந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 40,62,354 பேரும், புதுச்சேரியில் 55,683 பேரும் அடங்குவர்.
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசனி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294295®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2294635)
வருகையாளர் எண்ணிக்கை : 44