பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஊராட்சி முன்னேற்றக் குறியீடு
प्रविष्टि तिथि:
04 AUG 2026 4:18PM by PIB Chennai
நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல் தொடர்பான பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், கிராம ஊராட்சிகள் மற்றும் அவற்றுக்கு இணையான அமைப்புகளின் செயல்பாட்டு முன்னேற்றத்தை அளவிடுவதற்கான ஒரு கூட்டு மதிப்பீட்டு கட்டமைப்பாக, ஊராட்சி முன்னேற்றக் குறியீடு (பிஏஐ) உருவாக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான பிஏஐ 2.0 மதிப்பீட்டுச் செயல்முறையில், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 2.59 லட்சம் கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பஞ்சாயத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான ‘மாற்றியமைக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சித் திட்டம்’ என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தை 2022-23 நிதியாண்டு முதல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2022-23 முதல் 2026-27 வரையிலான நிதியாண்டுகளில், 2026 ஜூலை 10 நிலவரப்படி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் என மொத்தம் 36,81,750 பேருக்கு 'நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்' குறித்த தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294288®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294602)
आगंतुक पटल : 7