ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறைக்கான உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகைத் திட்டம்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 1:43PM by PIB Chennai
ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 170 நிறுவனங்கள் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை இழை உடைகள் தயாரிப்பில் 43 நிறுவனங்களும், செயற்கை இழைத் துணிகள் தயாரிப்பில் 38 நிறுவனங்களும், தொழில்நுட்பக் கைத்தறிப் பிரிவில் 89 நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 225 பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
31 மார்ச் 2026 நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம் ரூ.8,117.64 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.11,241 கோடி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு 33,427 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை மூலம் இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294195®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2294565)
आगंतुक पटल : 11