மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாணவர்களின் மனநலனைப் பாதுகாத்தல்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 8:14PM by PIB Chennai

மாணவர்களிடையே தற்கொலைச் சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், தற்கொலை தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மனம் சார்ந்த மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்விற்கான உளவியல் ரீதியான ஆதரவையும் வழங்கி வருகிறது.

கல்வி அமைச்சகத்தின் 'மனோதர்பன்' என்ற முன்முயற்சி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மனம்  மற்றும் உணர்வுசார் நல்வாழ்விற்கான உளவியல் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

ஐஐடி மெட்ராஸில் 2026 ஜூலை 12-13 தேதிகளில் மனநலம் குறித்த பிராந்தியப் பயிலரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் வளாக நல்வாழ்வுச் சூழலை வலுப்படுத்துவதற்கும் கல்வி நிறுவனத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மனநல நிபுணர்களை ஒன்றிணைத்தது. மே 2024 முதல், திறன் மேம்பாட்டு அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் பிராந்தியப் பயிலரங்குகளில் 4,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294038&reg=48&lang=2                         

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2294122) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी