மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 8:12PM by PIB Chennai

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் முறையின் (UDISE+) தரவுகளின்படி, தொடக்கக் கல்வி நிலையில்  2024-25-ல் 2.3 ஆக இருந்த இடைநிற்றல் விகிதம், 2025-26-ல் 1.8 ஆகக் குறைந்தது. நடுநிலைப் பிரிவில் 3.5-லிருந்து (2024-25) 3.6 ஆக (2025-26) அதிகரித்தது. மேல்நிலைப் பிரிவில், 2024-25-ல் 8.2 ஆக இருந்த இடைநிற்றல் விகிதம், 2025-26-ல் 7.0 ஆகக் குறைந்தது.

அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதற்கும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், மேல்நிலை வரை புதிய பள்ளிகளைத் திறப்பது/மேம்படுத்துவது, பள்ளி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி/மானியம் வழங்கப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ், தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 2020 மே 17 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் இ-வித்யா முன்முயற்சி, நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் கல்வியை அணுகும் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில், டிஜிட்டல், இணையம் மற்றும் ஒலிபரப்பு சார்ந்த கல்வி முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறது.

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294035&reg=3&lang=3                       

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2294117) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu