சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தித் தொழிற்சாலைகள் அமையவுள்ளன மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 7:47PM by PIB Chennai
P2BWNV.jpeg)
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI), நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காலணி உற்பத்தித் துறைக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில், தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மன்றத்தின் (NCVET) அங்கீகாரம் பெற்ற புதிய தொழில்முறைப் பயிற்சிப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இன்று (03.08.2026) சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பயிற்சிப் பாடத்திட்டங்கள் குறித்துத் தெரிவித்த மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. கே. முரளி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், 1957-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், கடந்த 69 ஆண்டுகளாகத் தொழில்முறை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னோடியாகச் செயல்பட்டு வருவதாகவும், இதுவரை 2,66,000-க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, அனைத்து நீண்டகால மற்றும் நடுத்தரகால பயிற்சிப் பாடத்திட்டங்களும் 70% செய்முறைப் பயிற்சி மற்றும் 30% வகுப்பறைப் பயிற்சியை உள்ளடக்கிய என்சிவிஇடி (NCVET) பாடத்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை, வேலூர், பெரம்பலூர், கரூர், திண்டிவனம், ராணிப்பேட்டை, ஆம்பூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட தொழில் மையங்களில் முன்னணி நிறுவனங்கள் ₹15,075 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து வருவதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சுமார் 1.76 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களும், 3,900-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்களும் தேவைப்படுவார்கள் எனக் கூறினார். இத்தேவையை எதிர்கொள்ள பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்கள், மத்திய காலணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.
விளையாட்டு காலணி உற்பத்தித் துறையில் அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு வருட கால "விளையாட்டு காலணி உற்பத்தி" சிறப்புப் பயிற்சிப் பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு. அருண் குமார் உடனிருந்தார்.
***
VJ/PD/EA/SE
(रिलीज़ आईडी: 2294017)
आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English