சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார நிறுவனங்கள் முழுவதும் சாரதி திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ. பி. நட்டா ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2026 7:41PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் 'சாரதி' திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் கலந்துகொண்டார்.
நோயாளியை மையமாகக் கொண்ட சுகாதார சேவை, மருத்துவச் சிகிச்சையை கடந்து, மருத்துவமனையில் நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் உரிய நேர வழிகாட்டுதல், உதவி மற்றும் கனிவான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதையும் உள்ளடக்கியது என்று கூட்டத்தின்போது திரு நட்டா வலியுறுத்தினார். திட்டமிட்ட தன்னார்வலர் பங்கேற்பு, சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் மருத்துவப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உதவுவதுடன், நோயாளிகளுக்கான வசதிகளையும் எவ்வாறு மேம்படுத்தும் என்பதை சாரதி திட்டம் நிரூபித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2293080®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2293378)
வருகையாளர் எண்ணிக்கை : 35