பாதுகாப்பு அமைச்சகம்
முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி.என். சர்மாவுக்கு முழு ராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு
प्रविष्टि तिथि:
01 AUG 2026 2:46PM by PIB Chennai
முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியான ஜெனரல் விஸ்வ நாத் சர்மாவுக்கு (ஓய்வு), ராணுவம் இறுதி அஞ்சலி செலுத்தியது. புதுதில்லியில் உள்ள பிரார் சதுக்க மயான தகன மேடையில் இன்று (01.08.2026) முழு ராணுவ மரியாதைகளுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. ஜெனரல் சர்மா நேற்று (31.07.2026) காலை புதுதில்லியில் தமது 97-வது வயதில் காலமானார்.
ராணுவத்தின் அனைத்துத் தரப்பினரின் சார்பாக, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் மலர்வளையம் வைத்து, துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மிசோரம் ஆளுநரும், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான ஓய்வுபெற்ற ஜெனரல் வி.கே. சிங்கும் மலர்வளையம் வைத்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். இறுதிச் சடங்கில், விமானப் படைத் தலைமைத் தளபதி, கடற்படைத் தலைமைத் தளபதி, பணியில் உள்ள, ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரிகள், முன்னாள் வீரர்கள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
ஜெனரல் ஷர்மா 1930 ஜூன் 4 அன்று லண்டனில் பிறந்தார். இவர், இந்தியாவின் முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்ற மேஜர் சோம்நாத் ஷர்மா, இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளரான லெப்டினன்ட் ஜெனரல் சுரேந்திர நாத் ஷர்மா ஆகியோரின் தம்பி ஆவார்.
பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அவர், 30 ஏப்ரல் 1988 முதல் 30 ஜூன் 1990 வரை ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பு வகித்தார். ஜெனரல் ஷர்மாவின் சிறப்பான சேவை, வீரம், தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறை தலைமுறையாக வீரர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292953®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2293028)
आगंतुक पटल : 15