சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கத்தின் தற்போதைய நிலை

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:35PM by PIB Chennai

பிரதமரின் பாதுகாப்பான தாய்மை திட்டம், 2016-இல் தொடங்கப்பட்டது முதல், 7.91 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்புச் சேவைகளைப்  பெற்றுள்ளனர்; மேலும் 1.24 கோடிக்கும் அதிகமான அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 2014-16 -ல் ஒரு லட்சம் நேரடிப் பிறப்புகளுக்கு 130 ஆக இருந்த இந்தியாவின் தாய்மார்கள் இறப்பு விகிதம் 2022-24-ல் ஒரு லட்சம் நேரடிப் பிறப்புகளுக்கு 87 ஆகக் குறைந்து, 43 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது.

இந்தியாவில் முதலாம் முப்பருவப் பிரசவத்திற்கு முந்தைய பதிவானது 2015-16-ல் 58.6%-ஆக இருந்தது, 2023-24-ல் இது 76.2%-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவமனைப் பிரசவங்கள் 78.9%-ல் இருந்து, தற்போது 90.6%-ஆக அதிகரித்துள்ளது.

இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல்  இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292344&reg=3&lang=1  

---

TV/PKV/SE


(रिलीज़ आईडी: 2292803) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी