சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதித்துறையில் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
प्रविष्टि तिथि:
31 JUL 2026 1:27PM by PIB Chennai
நீதித்துறை அமைப்பில் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இணைய வழி நீதிமன்றங்கள் திட்டம் நாடு முழுவதும் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணுத் தாக்கல் முறை என்பது வழக்குகள், எழுத்துப்பூர்வ வாக்குமூலங்கள், பதில்கள் மற்றும் பிற தொடர்புடைய மனுக்களை இணையவழியில் தாக்கல் செய்வதற்கான முழுமையான டிஜிட்டல் தளமாகும். 30.06.2026 நிலவரப்படி, உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட 25 உயர் நீதிமன்றங்களில் மின்னணுத் தாக்கலுக்கான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 30.06.2026 நிலவரப்படி, நாடு முழுவதும் மின்னணுத் தாக்கல் முறை மூலம் மொத்தம் 1.25 கோடி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மின்னணுத் தாக்கல் முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், உச்ச நீதிமன்றத்தின் இ-கமிட்டி , உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து, மாநில நீதித்துறை அகாடமிகள், அந்தந்த உயர் நீதிமன்றங்கள் மூலம் நீதித்துறை அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பிற பங்குதாரர்களுக்குப் பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், நோக்குநிலைப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292279®=3&lang=1
***
SS/PKV/SE
(रिलीज़ आईडी: 2292669)
आगंतुक पटल : 10