சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருச்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் தேசிய அளவிலான வாங்குவோர், விற்போர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் கண்காட்சி
प्रविष्टि तिथि:
31 JUL 2026 5:37PM by PIB Chennai
மத்திய அரசின், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய சிறுதொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, திருச்சி வட்டார குறு, சிறு தொழில் சங்கங்கள் ஆகியவை இணைந்து திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் எம்எஸ்எம்இ கனெக்ட் 2026 – திருச்சிராப்பள்ளி (MSME Connect 2026-Tiruchirappalli) என்ற தலைப்பில் தேசிய அளவிலான வாங்குவோர் விற்போர் மேம்பாட்டு நிகழ்வையும், தொழில் கண்காட்சியையும் ஏற்பாடு செய்துள்ளன. இது 31.07.2026, 01.08.2026 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் பொதுக் கொள்முதல் கொள்கை 2012 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்புகளை வழங்குவதுமாகும்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் அகிலா, தஞ்சாவூர் மத்திய உணவுப் பதப்படுத்துதல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பழனிமுத்து, திருச்சி மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அரசுத்துறைகள், வங்கிகள் 30-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை தாங்கள் குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன.
இந்நிகழ்வின் ஒரு முக்கிய அங்கமாக நடைபெறும் கருத்தரங்குகளில் பொதுத் துறை நிறுவன அதிகாரிகள் பங்கேற்று தங்கள் நிறுவனத்தின் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
திருச்சி வட்டாரத்தைச் சார்ந்த தொழில்முனைவோர் இந்நிகழ்வை பயன்படுத்தி தங்கள் தொழிலின் சந்தை வாய்ப்புகளை பெருக்கி பொருளாதார ரீதியாக பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
***
TV/PLM/RJ/SH
(रिलीज़ आईडी: 2292587)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English