பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
கேரளாவில் பழங்குடியினர்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:40PM by PIB Chennai
மக்களவையில் இன்று (30.07.2026) ஒரு கேள்விக்கு பதிலளித்த பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கேரளாவின் பழங்குடியினர் மக்கள் தொகை 4,84,839 ஆகும் என்றும், இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.45 சதவீதம் என்றும் தெரிவித்தார்.
பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டங்கள் வயநாடு, இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர் ஆகியவை ஆகும்.
பழங்குடியினர், பிற பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைகள் சட்டம் - 2006, அந்தந்த மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், மாநிலங்களிடமிருந்து பெறப்படும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கைகள் மூலம் அதன் செயலாக்கத்தைக் கண்காணிக்கிறது.
கேரளாவில் வசிக்கும் பழங்குடியினர் உட்பட, அனைத்து மாநில பழங்குடியினரின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. நில உரிமை, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள், 2006-ம் ஆண்டின் வன உரிமைச் சட்டம், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன.
* பழங்குடியினர் துணைத் திட்டம், இதர மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக கேரள அரசுக்கு விடுவிக்கப்பட்ட நிதி:
2025-26 - ₹ 920.00 கோடி
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291612®=3&lang=1
(Release ID : 2291612)
***
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2291829)
आगंतुक पटल : 6