பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை வலுப்படுத்துதலும் விரிவாக்குதலும்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:39PM by PIB Chennai

மக்களவையில் இன்று (30.07.2026) ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே, பழங்குடியின மாணவர்களுக்கு அவர்களின் சொந்த சூழலிலேயே, உள்ளூர் கலை, கலாச்சாரத்தைப் பாதுகாத்து, தரமான கல்வியை வழங்குவதற்காக பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி திட்டத்தை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 50% க்கும் அதிகமான பழங்குடியினர் மக்கள்தொகையையும், குறைந்தது 20,000 பழங்குடியினரையும் கொண்ட பகுதிகளில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படுகின்றன. இப்போதுவரை, 728 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 508 நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 8 பள்ளிகள் உள்ளன.

 

அங்கு நவீன கற்பித்தல் கருவிகளுடன் கூடிய நன்கு வசதியளிக்கப்பட்ட வகுப்பறைகள், இணைப்புப் படிப்புகள், குறைத்தீர் வகுப்புகள், அறிவியல்/ கணினி ஆய்வகங்கள், பல்வேறு கற்றல் வளங்களைக் கொண்ட நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள், இசை, கலை, விளையாட்டு போன்ற பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுக்கான வசதிகள், டிஜிட்டல் கல்விக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், இணைய வசதியுடன் கூடிய கணினி ஆய்வகங்கள் போன்றவை உள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291610&reg=3&lang=1

 

(Release ID : 2291610)

***

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2291820) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी