மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஒரே நாடு, ஒரே சந்தா திட்டத்தின் அமலாக்கம்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 7:02PM by PIB Chennai
ஒரே நாடு, ஒரே சந்தா (ONOS) திட்டம், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் 32 வெளியீட்டாளர்களின் 13,000-க்கும் மேற்பட்ட வெளியீடுகளை (Journal) அணுகும் வசதியை வழங்குகிறது. இந்த வெளியீடுகள் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கலை மற்றும் மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 7073 உயர்கல்வி நிறுவனங்கள், 426 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 7499 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 333 உயர்கல்வி நிறுவனங்கள், 18 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 351 நிறுவனங்கள் ஒரே நாடு, ஒரே சந்தா திட்டத்தில் சேர்ந்துள்ளன.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், மக்களவையில் இன்று அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290088®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2290191)
आगंतुक पटल : 12