மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் - தமிழகத்தில் 36 பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன

प्रविष्टि तिथि: 27 JUL 2026 5:27PM by PIB Chennai

பிஎம் ஸ்ரீ‌‌ திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள பள்ளிகளின் (மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக) எண்ணிக்கை குறித்தும், இப்பள்ளிகளில் இந்தி அல்லாத தாய்மொழிகளைக் கற்பிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை (மொழி, மாநிலம் /யூனியன் பிரதேசம் வாரியாக) குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன:

பிஎம் ஸ்ரீ திட்டம், நாடு முழுவதும் 14,500-க்கும் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கில்,  செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். தற்போது வரை, கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி, கல்வி ஆராய்ச்சி பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் உட்பட, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 13,092 பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மாநிலம்/யூனியன் பிரதேசம் வாரியான பிஎம் ஸ்ரீ பள்ளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 36 பள்ளிகளும், இந்தப் பள்ளிகளில் இந்தி அல்லாத தாய்மொழி பயிற்றுவிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் மொழி வாரியாக முறையே சமஸ்கிருதம் - 41, பிராந்திய மொழி - 12 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மக்களவையில் இன்று, மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290004&reg=3&lang=1

(Release ID: 2290004)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290115) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी