சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

प्रविष्टि तिथि: 25 JUL 2026 6:19PM by PIB Chennai

புதுச்சேரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம் சார்பில் வளர்ச்சி அடைந்த பாரதம் - இளைஞர் சங்கமம் நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஆரோக்கியமான மற்றும் போதைமற்ற வாழ்க்கையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசியர் சி. சதீஷ் குமார் தனது வரவேற்புரையில், சமூகப் பொறுப்புள்ள, நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களை உருவாக்குவதில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். 

மாவட்ட இளைஞர் அலுவலர் செ. எஸ். ராஜு திட்டத்தின் நோக்கங்களையும் செயல்முறைகளையும் விளக்கினார். முன்னோடி இளைஞரான (Youth Icon) ஆதித்திய குமார் சிங் மாணவர்களை ஒழுக்கம், நீதி மற்றும் இலக்குகளை முன்னிலைப்படுத்தும் வாழ்க்கை முறையை ஏற்க ஊக்கப்படுத்தினார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு பேசுகையில், 'வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat)' என்ற இலக்கு நாட்டின் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் பொறுப்புணர்ச்சியால் தீர்மானிக்கப்படும் என அவர் வலியுறுத்தினார். போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நிலை, மனநிலை மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி பேராசிரியர் ஆர். நளினி மற்றும் டாக்டர் இப்திகார் ஆலம் சிறப்புரைகள் வழங்கினர். தொடர்ந்து இளைஞர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. நிறைவாக பாத்திமா ரிஷ்பா நன்றியுரை வழங்கினார்.                         

***

TV/RJ


(रिलीज़ आईडी: 2289408) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English