வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் சேவை ஏற்றுமதி 421.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு
प्रविष्टि तिथि:
24 JUL 2026 3:55PM by PIB Chennai
சேவை ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு பலமுனை உத்திகளைப் பின்பற்றுகிறது. அவை பின்வருமாறு:
1. குறிப்பிட்ட சந்தைகள் மற்றும் துறைகளுக்கான ஏற்றுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2. சேவை ஏற்றுமதிக்குத் தடையாக இருக்கும் உள்நாட்டுத் துறைசார் சவால்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து அடையாளம் காணப்பட்டு, தொடர்புடைய துறைகள் அல்லது அமைச்சகங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன.
3.தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம்
முக்கியத் துறைகளில் இந்திய சேவை வழங்குநர்கள் சாதகமான சூழலில் சேவைகளை வழங்க ஏதுவாக, விரிவான சந்தை அணுகல் மற்றும் 'தேசிய அளவிலான சமமான அணுகுமுறை ஆகியவற்றை அரசு உறுதி செய்துள்ளது. முக்கிய சேவைகளுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் காலக்கெடுவுக்கு உட்பட்டதாகவும், கணிக்கக்கூடியதாகவும், புறநிலைத்தன்மை கொண்டதாகவும், பாரபட்சமற்றதாகவும் மற்றும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்தியாவின் சமீபத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் உள்நாட்டு ஒழுங்குமுறை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தெளிவற்ற, கணிக்க முடியாத ஒழுங்குமுறை நடைமுறைகளால் இந்திய சேவை வழங்குநர்கள் ஒப்பந்த நாடுகளில் சவால்களை எதிர்கொள்வது தவிர்க்கப்படுகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம், வெளிநாட்டுச் சந்தைகளில் சேவைகளை வழங்கத் திறமையான இந்தியத் தொழில் வல்லுநர்கள் தற்காலிகமாகச் செல்வதை எளிதாக்கும் கட்டமைக்கப்பட்ட மற்றும் விரைவான வழிமுறைகளை இந்தியா பெற்றுள்ளது.
இந்தத் தகவலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288851®=48&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2289243)
आगंतुक पटल : 6