விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை அபாயம் மற்றும் பயிர்க் காப்பீடு

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:58PM by PIB Chennai

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை முக்கியமாக பரப்பளவு அணுகுமுறையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறையின்படி, காப்பீடு செய்யப்பட்ட பயிரின் வரம்பு விளைச்சல் அளவோடு ஒப்பிட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது. இதற்கான உண்மையான விளைச்சல் தரவுகள், சம்பந்தப்பட்ட மாநில அரசால் பயிர் அறுவடை பரிசோதனை மற்றும் யெஸ்-டெக் தொழில்நுட்பம் சார்ந்த விளைச்சல் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

 

இருப்பினும், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, மேகவெடிப்பு மற்றும் இயற்கையான தீ விபத்து போன்ற உள்ளூர் அளவிலான இடர்பாடுகளாலும், புயல் அல்லது பருவமழைக்கு மாறான மழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் அறுவடைக்குப் பிந்தைய காலத்திலும் ஏற்படும் இழப்புகள், காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்ட பண்ணைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இத்தகைய சூழல்களில் ஏற்படும் இழப்பு மற்றும் அதற்கான இழப்பீட்டுக் கோரிக்கைகள் ஆகியவை, இத்திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டுக்குழுவால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

 

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289028&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2289225) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी