மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

உயர்துல்லிய மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி

प्रविष्टि तिथि: 24 JUL 2026 1:00PM by PIB Chennai

உயர்தரமான, துல்லியமான மருத்துவச் சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் சில முக்கிய திட்டங்கள்:

1)   மருத்துவச் சாதனங்கள் உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் 3,420 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

2)   மருத்துவச் சாதன உற்பத்திப் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் 300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் உட்பட 3 இடங்களில் மருத்துவப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

3)   மருத்துவச் சாதன தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான திட்டம் 2027-28–ம் நிதியாண்டு வரை 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

உள்நாட்டில் மருத்துவச் சாதனங்கள் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 17,201 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288770&reg=48&lang=1

***

SS/PLM/SM/SH


(रिलीज़ आईडी: 2289145) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी